தமிழ்நாடு

செடியில் சிக்கி வெடித்த நாட்டுத் துப்பாக்கி: உயிரிழந்த சிறுவன்!

செடியில் சிக்கி வெடித்த நாட்டுத் துப்பாக்கி: உயிரிழந்த சிறுவன்!

webteam

வேலூர் அருகே வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்         

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஒடுகத்தூர் வனச்சரகத்திற்குட்பட்டது கருத்த மலை வனப்பகுதி. இப்பகுதிக்குள் கடந்த 24-ம் தேதி முள்பாடிமலை பகுதியைச் சேர்ந்த 6 பேரும், மற்றும் பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த ஒருவரும் அத்துமீறி நுழைந்துள்ளனர். விலங்குகளை வேட்டையாடுவதற்காக கையில் நாட்டுத்துப்பாக்கியுடன் அவர்கள் காட்டுக்குள் சென்றதாக தெரிகிறது. 

காட்டுக்குள் சென்ற 7 பேரில் 16 வயதான தூசிவேந்தன் என்ற சிறுவன் கையில் நாட்டுத்துப்பாக்கியை கொண்டு சென்றுள்ளான். அப்போது முட்செடியில் சிக்கிய அவனது நாட்டுத்துப்பாக்கி எதிர்பாராதவிதமாக வெடித்தது. கணநேரத்தில் வெளியேறிய துப்பாக்கி குண்டு தூசிவேந்தனின் தலைப்பகுதியின் இடப்புறத்தை பலமாக தாக்கியது. இதில் நிலைகுலைந்த தூசிவேந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக தூசிவேந்தனின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், தூசிவேந்தனின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர்.