தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளை அரசு பணி இடமாற்றம் செய்துள்ளது.
தென் சென்னை கூடுதல் ஆணையர் சாரங்கன் மாநில குற்ற ஆவண காப்பக ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏடிஜிபி சைலேஷ்குமார் யாதவ் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். வடசென்னை கூடுதல் ஆணையராக தினகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென் சென்னை கூடுதல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வாலும், போக்குவரத்து காவல் ஏடிஜிபியாக அருணாச்சலமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மண்டல ஐஜியாக நாகராஜன் இடமாற்றம் அடைந்துள்ளார். குற்ற ஆவணப்பிரி ஐ.ஜி சுமித்சரண் அமலாக்கப்பிரிவு ஐ.ஜியாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்பு எஸ்.பி ஜெயலக்ஷ்மி வணிக குற்றப் புலனாய்வு எஸ்.பி ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று இன்னும் சில ஐபிஎஸ் அதிகாளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Also Read -> தனித்தேர்வராக இனி ப்ளஸ் 2 தேர்வை எழுத முடியாது