தமிழ்நாடு

15 முதல் ஸ்டிரைக்: போக்குவரத்து சங்கம் அறிவிப்பு

15 முதல் ஸ்டிரைக்: போக்குவரத்து சங்கம் அறிவிப்பு

webteam

ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு‌ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஊதிய ஒப்பந்தத்தை முறைப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களை போராட்டத்திற்கு தயார்படுத்தும் வகையில் 9ம் தேதி அனைத்து மண்டல தலைமையகங்களிலும் வாயிற்கூட்டம் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்களின் இப்போராட்டத்தால் 90 சதவிகித பேருந்துகள் இயங்காது என போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. போக்குரவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தவும் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.