தமிழ்நாடு

சென்னையில் 150 ஆண்டுகள் பழைய கட்டடம் இடிந்தது

webteam

சென்னை ராஜாஜி சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள 150 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்தது. 

சென்னை ராஜாஜி சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 150 ஆண்டுகள் பழமையான 3 மாடிகளைக் கொண்ட கட்டடம் ஒன்று உறுதித் தன்மை இழந்து காணப்பட்டது. இந்நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் திடீரென அந்தக் கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. விபத்தால் ராஜாஜி சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் ஆகியோர் இடிபாடுகளை அகற்றும் பணியை பார்வையிட்டனர். சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்திய உதயகுமார், அருகில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின் கட்டடம் முழுவதுமாக இடிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.