காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 900-க்கும் அதிகமான ஏரிகளில் 170 ஏரிகள் மட்டுமே நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து புதிய தலைமுறையிடம் பேசிய மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரி முத்தையா, ஏரிகள் நிரம்பியிருப்பது பாசனம் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு உதவும். நிரம்பிய நிலையிலுள்ள மதுராந்தகம் ஏரி, ஸ்ரீபெரும்புதூர் ஏரி, செங்கல்பட்டு கணவாய் ஏரி உள்ளிட்ட 170 ஏரிகளும் பாதுகாப்பாக இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. இதுதவிர, 202 ஏரிகள் 75 சதவிகித அளவுக்கும் 208 ஏரிகள் பாதியளவுக்கு மேலும் நிரம்பியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்ட ஏரிகள் நிரம்பி வருவது குடிநீர்த் தேவையை பூர்த்திசெய்ய உதவும் என்று கூறினார்.