தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, பல்வேறு துறைகளிலும் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து வருகிறது.
இந்நிலையில் இன்று, 15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் இட ஒதுக்கீடு செய்துள்ளது.
அதன்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெயந்த் முரளி ஆயுதப்படை ஏடிஜிபியாகவும், லோகநாதன் ஐஜியாகவும், பிரதீப் வி. பிலிப் தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குநராகவும், ஜெயராமன் தமிழ்நாடு காவல்துறை சீருடை பணியாளர் தேர்வாணயத்தின் ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக ஆபாஷ்குமாரும், ஐஜியாக தினகரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னை காவல் ஆணையராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் சென்னை குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.