தமிழ்நாடு

சேலத்தில் 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

சேலத்தில் 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

webteam

செக்கனூர் வாய்காலில் பொதுமக்களை அச்சுறுத்திய 15 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக பிடித்தனர். 

சேலம் மாவட்டம் செக்கனூர் பகுதியில் உள்ள கிழக்கு மேற்கு வாய்க்காலில் 15 அடி நீள மலைப்பாம்பு ஒன்று பகல் நேரங்களில் சுற்றி வந்துள்ளது. மலைப்பாம்பை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்பு வாய்கால் பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் பாம்பு பிடிக்கும் உபகரணங்களுடன் மலைப்பாம்பை பாதுகாப்பாக பிடித்து காப்புக்காட்டில் விட்டனர்.

மேலும் பாம்பினால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர். செக்கனூர் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அபாயகரமான பாம்புகள் மற்றும் வன விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் குடிபெயர்வதால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியில் வருவதை தவிர்த்து வருகின்றனர்.