தமிழ்நாடு

ஆயிரத்து 492 சவரன் நகைக் கொள்ளை : கேமராவை சேதப்படுத்திய கும்பல்

ஆயிரத்து 492 சவரன் நகைக் கொள்ளை : கேமராவை சேதப்படுத்திய கும்பல்

webteam

மதுரையில் அடகுக் கடையில் 1,492 சவரன் நகையைக் கொள்ளையடித்தவர்கள் கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

மதுரை மாவட்டம் நரிமேடு என்னுமிடத்தில் கோபிநாத் என்பவர் அடகுக் கடை நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி இவரது நகைக்கடைக்குள் நள்ளிரவில் ஒரு கொள்ளைக் கும்பல் நுழைந்தது. முகமூடிக் அணிந்துகொண்ட வந்த அக்கும்பல் சுமார் 12 கிலோ நகைகள் மற்றும் 9 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். இதையடுத்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கொள்ளையர்களை தனிப்படைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

சம்பவ இடத்திற்கு அருகாமையில் இருந்த ஒரு சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த பார்த்தபோது, அடகுக்கடைக்கு எதிரே உள்ள தனியார் நிறுவனத்தின் கண்காணிப்புக் கேமராவை கொள்ளையர்கள் உடைக்கும் காட்சி அதில் பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது. அதன்மூலம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கொள்ளையர்கள் நகைகளை மினிவேனில் ஏற்றிச் சென்றது தெரியவந்துள்ளது. மினி வேனின் பதிவெண்ணை பயன்படுத்தி 4 பேரைப் பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.