தமிழ்நாடு

தீபாவளிக்கு 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளிக்கு 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

webteam

தமிழகம் முழுவதும் தீபாவளியை முன்னிட்டு வரும் மூன்று நாட்களுக்கு 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளி என்றாலே பேருந்துகள், ரயில் போக்குவரத்து களைகட்டும். ஏராளமானோர் டிக்கெட் கிடைக்காமல் அல்லல்படுவதும் உண்டு. ஆனால் இந்த தீபாவளி அதிலிருந்து வித்தியாசப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 25-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டபோது மக்கள் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்தனர். பல்வேறு தரப்பு மக்கள் தங்கள் சொந்த ஊரிலேயே தங்கியுள்ளனர்.

கொரோனாவிலிருந்து இன்னும் சரியாக மீளாததால் பண்டிகளை பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் பாதுகாப்புகளுடனும் கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தீபாவளியை முன்னிட்டு வரும் மூன்று நாட்களுக்கு 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு 9,510 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் பேருந்துகளில் பயணம் செய்ய பயப்படுவதால் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு கடந்த ஆண்டை விட 40 சதவீதம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.