சென்னையில் போதைப்பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு (2024) ஆக்ஸ்ட் மாதம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (ANIU) என்ற தனிப்படை போலீசார் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவானது சென்னையில் போதைப்பொருள் விற்பனை, பயன்படுத்துதல் தொடர்பாக கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா, சினிமா உதவி இயக்குநர் ஸ்ரீ பிரேம் குமார் ஆகியோரையும் கைது செய்தது இந்த குழுதான்.
இந்தக்குழு உருவாக்கப்பட்டு தற்போது வரை கடந்த 11 மாதங்களில் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் மொத்தமாக சென்னையில் 1411 வழக்குகள் பதிவு செய்துள்ளது. இவற்றுள் கஞ்சா கடத்துதல், விற்பனை தொடர்பாக 1143 வழக்குகளும், போதைமாத்திரை விற்பனை, கடத்தல் தொடர்பாக 139 வழக்குகளும், மெத், கொக்கைன், ஹெராயிம் உள்ளிட்ட உயர் ரக போதைப்பொருட்கள் தொடர்பாக 129 வழக்குகளும் பதிவு செய்துள்ளது.
மொத்தமாக கடந்த 11 மாதங்களில் 3778 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 299 பிற மாநிலம் மற்றும் வெளிநாட்டவர்கள் அடக்கம். மொத்தமாக 2534 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிந்தட்டிக் நெட்வொர்க் எனப்படும் மெத், கொக்கைன், ஹெராயின், அம்பெட்டமை உள்ளிட்ட உயர் ரக போதைப்பொருள் தொடர்பாக 129 வழக்குகள் பதிவு செய்து 67.163 கிலோ உயர் ரக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
61,627 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கொக்கைன், மெத், அம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தல், விற்பனை தொடர்பாக 129 வழக்குகள் பதிவு செய்து மொத்தம் 67 கிலோ சிந்தட்டிக் போதைப்பொருள் பறிமுதல் செய்துள்ளனர்.
இவற்றுள் மெத்தம்பெட்டமைன் 22.9 கிலோ, மெத்தகுலைன் 2.6 கிலோ, கெட்டமைன் 39.01 கிலோ, சூடோஃபெட்ரின் 2 கிலோ, ஹெராயின் 266.84 கிராம், கொக்கைன் 142.14 கிராம், ஸ்டாம்ப் ரக போதைப்பொருள் 3.68 கிராம், MDMA மாத்திரை 203.5 கிராம் என மொத்தம் 67 கிலோ உயர் ரக போதைப்பொருள் பறிமுதல் செய்துள்ளனர்.
சிந்தட்டிக் போதைப்பொருள் தொடர்பாக 84 போதைப்பொருள் நெட்வொர்க் அடையாளம் காணப்பட்டு 534 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவற்றுள் 25 வெளிநாட்டவர்கள், பிற மாநிலத்தவர்கள் 88 நபர்கள், பெண்கள் 10 நபர்கள், 33 கல்லூரி மாணவர்கள் 178 இளைஞர்கள் அடக்கம். இந்த வழக்கில் மொத்தம் 259 நபர்கள் மீது குண்டர்தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மெத்போதைப்பொருள் தாரிப்பில் ஈடுப்பட்ட இரண்டு ஆய்வகங்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மெத் போதைப்பொருள் வழக்கில் காவல்துறையை சேர்ந்த 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவற்றுள் 2 நபர்கள் NCN காவலர்கள் எனவும் 3 நபர்கள் சென்னை காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் எனவும் சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.