தமிழ்நாடு

ஆவடி அருகே 1381 கிலோ தங்கம் பறிமுதல் - பறக்கும்படை விசாரணை

ஆவடி அருகே 1381 கிலோ தங்கம் பறிமுதல் - பறக்கும்படை விசாரணை

webteam

ஆவடி அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1381 கிலோ தங்க நகைகளை பறக்கும்படையினர் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

நாளை தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் பறக்கும்படையினர் மாநிலம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஆவடி அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த இரண்டு வேன்களை பறக்கும்படையினர் சோதனை செய்தனர்.

இதில் உரிய ஆவணங்களின்றி 1381 கிலோ தங்கம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தலா 25 கிலோ என்ற கணக்கில் பெட்டிகளில் இருந்த தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் வேனில் வந்த 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் வேனில் எடுத்து செல்லப்பட்ட தங்க நகைகள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக வாகனத்தில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சுவிட்சர்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து பறக்கும்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.