தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 13 பேர் படகுகளுடன் கைது‌

தமிழக மீனவர்கள் 13 பேர் படகுகளுடன் கைது‌

webteam

தனுஷ்கோடி அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 13 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், நூற்றுக்கும் அதிகமான படகுகளிலிருந்த மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். 

நேற்று முழுவதுமே தமிழக மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் அச்சுறுத்தி வந்துள்ளனர். நள்ளிரவில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மூக்கையா எமர்சன், சேகர், வில்பர்ட் உள்ளிட்ட 13 மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை கச்சத்தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்து விட்டு திரும்பிய 100க்கும்‌ அதிகமான படகுகளையும் இலங்கை கடற்‌படையினர் தாக்கியுள்ளனர். 

படகுகளிலிருந்த மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்ததில் தலா 30ஆயிரத்திலிருந்து 75 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு‌ ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை  ஜனவரி 18ஆம் தேதி வரை சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.