சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 8ஆவது மடியிலிருந்து குதித்து பிரீத்தி 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அருள் மூர்த்தி. கிராப்பிக்ஸ் டிசைனர் பள்ளி நடத்தி வருகிறார். இவரது மகள் பிரீத்தி. 12-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவு பிரீத்தி மறுதேர்வுக்கு படிக்காமல் டிவி பார்த்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவது தந்தை கண்டித்ததாக தெரிகிறது. மனமுடைந்த அவர் 8-வது மாடியில் இருந்து குதித்தார். அவரை பெற்றோர் மீட்டு சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். அவரது உடல் பிரேதபரிசோதனைக்காக திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கேகே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். "ப்ளூவேல்" விளையாட்டு தொடர்பாக எதுவும் இதில் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.