+2 பொதுத்தேர்வு முடிவுகள் pt
தமிழ்நாடு

வெளியானது +2 பொதுத்தேர்வு முடிவுகள்!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்களில் முடிவுகளை வெளியிட்டார் .

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், இதற்கான முடிவுகள் இன்று (மே 8) காலை 9 மணிக்கு வெளியானது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்களில் முடிவுகளை வெளியிட்டார் .மாணவர்கள் முடிவுகளை https://tnresults.nic.in/, https://results.digilocker.gov.in/ மற்றும் https://www.dge.tn.gov.in/ என்ற இணைய முகவரிகள் மூலம் ஆன்லைனில் அறிந்துகொள்ளலாம்.

இந்தவகையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 95.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7,53,142 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களைவிட 3.54% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவியர் 4,05,472 (96.70%) பேரும் மாணவர்கள் 3,47,670 (93.16%) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் .

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளில் 91.94%, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.71%, தனியார் பள்ளிகளில் 98.88% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்தாண்டு 3,78,545 மாணவர்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8,21,057 பேர் எழுத் அனுமதிக்கப்பட்டனர். இதில் முதல் நாள் தேர்வில் 11,430 பேர் தேர்வெழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.