தமிழ்நாடு

திருப்பதி கோயிலில் இன்று முதல் 12,750 பேர் தரிசனத்திற்கு அனுமதி

திருப்பதி கோயிலில் இன்று முதல் 12,750 பேர் தரிசனத்திற்கு அனுமதி

webteam

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் தினசரி 12 ஆயிரத்து 750 பேர் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பொது முடக்க தளர்வுகளுக்கு பின் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த எட்டாம் தேதி முதல் சோதனை முறையில் இரண்டு நாட்களுக்கு தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது. இதனையடுத்து 11ம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதன் அடுத்த கட்டமாக இன்று முதல், நாள் ஒன்றுக்கு 12,750 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

ஜூன் 30 ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் மற்றும் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் எனவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.