சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. மொத்தமாக 127 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று சசிகலா தரப்பில் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மதுசூதனன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உள்ளிட்டோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இவர்களோடு சேர்த்து மொத்தம் 127 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.