தமிழ்நாடு

பள்ளியில் பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை

பள்ளியில் பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை

webteam

தஞ்சாவூரில் தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவர் ஒருவர் வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

திருக்காட்டுப்பள்ளி  நடுபடுகை கிராமத்தை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மகன் சதீஷ்பாபு அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில் சதீஷ்பாபு இன்று காலை சிறப்பு பயிற்சி வகுப்பிற்காக பள்ளிக்கு சென்றிருந்தார். வகுப்பு முடிந்ததும் மற்ற மாணவர்கள் காலை உணவு உட்கொள்ளுவதற்காக வெளியில் சென்றுள்ளனர். அப்போது வகுப்பறையில் தனியாக இருந்த சதீஷ்பாபு மின்விசிறியில் கயிற்றை பயன்படுத்தி தூக்கில் தொங்கி உள்ளார்.

பின்பு வகுப்பறைக்கு வந்த மாணவர்கள் சதீஷ்பாபு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மாணவரின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மாணவனின் தற்கொலை குறித்தும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.