sexual harassment Pt web
தமிழ்நாடு

சென்னை, புறநகர் | ஒரே நாளில் 12 பாலியல் குற்றங்கள்.. பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக தொடரும் வன்முறை!

தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. திருவள்ளூரில் 3 வயது சிறுமி உட்பட 24 மணி நேரத்தில் 12 பாலியல் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

PT WEB

சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் 24 மணி நேரத்தில் 12 பாலியல் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 3 வயது குழந்தை உட்பட 8 சிறுமிகள் மற்றும் 4 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூரில் பிஹாரைச் சேர்ந்த 3 வயது சிறுமி, மதுபோதையில் இருந்த 19 வயது வடமாநில வாலிபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, புதரில் வீசப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

sexual violence

மணிமங்கலம், காட்டுப்பாக்கம், திருவள்ளூர், மயிலாப்பூர், பெரம்பூர் மற்றும் அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் சிறுமிகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளன. மேலும் மாங்காடு, போரூர், கோயம்பேடு மற்றும் அண்ணாசாலை பகுதிகளில் 4 பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகினர். இந்த 12 வழக்குகளிலும் தொடர்புடையதாகக் கருதப்படும் நபர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.