தமிழ்நாடு

டெங்கு, காய்ச்சலால் சிறுவர், ‌சிறுமியர் உட்பட 12 பேர் உயிரிழப்பு

டெங்கு, காய்ச்சலால் சிறுவர், ‌சிறுமியர் உட்பட 12 பேர் உயிரிழப்பு

webteam

தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பால் இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் தனியார் கல்லூரி முதல்வர் தமிழரசன், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் எம்.சி.ஏ பட்டதாரி ப்ரீத்தி என்பவரும் டெங்கு பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கோவை அன்னூரைச் சேர்ந்த சிறுமி விஷ்மிதா, திருச்சி மாவட்டம் சிறுகாம்பூரில் ராஜலட்சுமி என்பவரும் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். மதுரை மாவட்டம் கோயமதியாபுரத்தில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட காசி விஸ்வநாதன் உயிரிழந்தார்.

சேலம் பனமரத்துப்பட்டியைச் சேர்ந்த கீதா, கொளத்தூரைச் சேர்ந்த ஜெகதீசன், திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டியைச் சேர்ந்த வந்திதேவன், மதுரை புதுக்காலனியைச் சேர்ந்த முனியாண்டி ஆகியோர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தனர். அதேபோல, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த சிறுவன் விஷ்ணு பிரகாஷ், ராமநாதபுரம் பெரியபட்டனத்தைச் சேர்ந்த ஜமால் முஹைதீன் ஆகியோரும் காய்ச்சலால் உயிரிழந்தனர். விருதுநகர் மா‌வட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் மூளைக் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.