ஆர்.கே.நகரில் தேர்தல் பறக்கும் படையினர் இரவில் நடத்திய ரோந்துப் பணியில் 12 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 17 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சீனிவாசன் என்பவரது ஒருவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் கைப்பற்றினர். அங்கு இருந்த 12 பேரைப் பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காசிமேடு துறைமுகம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் சென்றுகொண்டிருந்த 5 பேரைப் பிடித்து விசாரித்ததில் அவர்களிடம் உரிய ஆவணங்களின்றி ஒரு லட்சத்து 28 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. அவற்றையும் பறிமுதல் செய்து விசாரணை செய்த காவல்துறையினர், அவர்கள் அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் என தெரிவித்துள்ளனர்.