பொன்னமராவதி அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் லாவகமாக பிடித்து வனத்துறை மூலம் காப்புகாட்டில் விட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கேசராபட்டி கிராமத்தில் வசிப்பவர் அஞ்சலை. இவரது வீட்டின் பின்புறம் சுமார் 12அடி நீளமுள்ள மலைப்பாம்பு கோழியை விழுங்கிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் அஞ்சலையும், அருகே இருந்தவர்களும் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் 12அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர், பின்னர் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட மலைப்பாம்பு செவிலிமலை காப்புக்காடு பகுதியில் விடப்பட்டது.