தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. சென்னையில் மட்டுமே 3,750 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. 1,12,661 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் 11,681 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 52 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேர் எந்தவித இணைநோயும் இல்லாதவர்கள். தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 84,361 ஆக உயர்வு கண்டுள்ளது.
நோய் தொற்று பரவலை தடுக்க தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு நடைமுறை அமலாகி உள்ளது. அத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ன. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்றைவிட அதிகரித்துள்ளது.