தமிழ்நாடு

திருடர்களுக்கு பயந்து புதைத்து வைக்கப்பட்டிருந்த 112 சவரன் நகைகள் கொள்ளை

திருடர்களுக்கு பயந்து புதைத்து வைக்கப்பட்டிருந்த 112 சவரன் நகைகள் கொள்ளை

webteam

கன்னியாகுமரியில் வீட்டின் அறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 33 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. 

பள்ளியவாடி அருகே செக்குவிளை பகுதியைச் சேர்ந்த முதியவர் ராஜையன், தன் மூத்த மகள் மற்றும் மனைவியின் நகைகளை கொள்ளையர்களுக்கு பயந்து தனது அறையிலேயே குழி தோண்டி புதைத்து வைத்திருந்தார். சுப நிகழ்ச்சிக்காக ராஜையன் நேற்று குடும்பத்தினருடன் கோயிலுக்குச் சென்றிருந்தார். வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்ட கொள்ளையர்கள், உள்ளே புகுந்து அறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 112 சவரன் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். 

வீடு திரும்பிய ராஜையன், நகைகள் களவு போயிருப்பதைக் கண்டு அதிர்ந்தார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டுக்கு அஞ்சி புதைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளையே கொள்ளையர்கள் அள்ளிச் சென்ற சம்பவம் கன்னியாகுமரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\