தமிழ்நாடு

வைரஸ் காய்ச்சலால் மாணவி உயிரிழப்பு

வைரஸ் காய்ச்சலால் மாணவி உயிரிழப்பு

rajakannan

தஞ்சை மாவட்டம் கீழவாசல் பகுதியை சேர்ந்த மாணவி வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தார். 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் குறைந்துள்ளது. இருப்பினும் டெங்கு காய்ச்சல் மரணங்கள் நிகழ்ந்து கொண்டு தான்  இருக்கிறது. இந்த நிலையில், தஞ்சை மாவட்டத்தில் மாணவி வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தார். 

கீழவாசல் ஆட்டுமந்தை அஞ்சல்காரத் தெருவை சேர்ந்த சையத் அப்துல்லாவின் 11 வயது மகள் ரெஹானாபேகம், ஆறாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக காய்ச்சல் காரணமாக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.