11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முகநூல்
தமிழ்நாடு

வெளியானது 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; எவ்வளவு சதம்?..யார் முதல் 5 இடம்?... முழு விபரம்!

மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி www.tnresults.nic.in மற்றும் https://results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளைப் பெறலாம்.

ஜெனிட்டா ரோஸ்லின்

மார்ச் 5-ம் தேதி முதல் நடைபெற்ற 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 23 ஆயிரம் பேர் எழுதினர். சுமார் 18 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். தமிழகத்தில் பத்தாம் வகுப்பு முடிவுகள் காலை 9 மணிக்கு வெளியான நிலையில், 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் அடுத்தடுத்து வெளியானது.

11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ். மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி www.tnresults.nic.in மற்றும் https://results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளைப் பெறலாம்.

பிளஸ் 1 மாணவியர் 95.13%, மாணவர்கள் 88.70% தேர்ச்சி

அதேபோல், மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்வு எழுதும் போது பதிவு செய்த கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தேர்ச்சி விகிதம்

பிளஸ் 1 தேர்வில், 4,03,949 மாணவியரும், 3,39,283 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 1 மாணவர்களைவிட 6.43% மாணவியர்கள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதல் 5 இடங்களை பெற்ற மாவட்டங்கள்

11ஆம் வகுப்பு தேர்ச்சியில் அரியலூர் மாவட்டம் முதலிடம் -97.76% பேர் தேர்ச்சி பெற்றுள்ளது.

2ஆம் இடத்தில், ஈரோடு-96.97%,

3ஆம் இடம் விருதுநகர் 96.23% ,

4 ஆம் இடம் கோவை 95.77%

5 ஆம் இடம் தூத்துக்குடி 95.07%

11ஆம் வகுப்பு பாடவாரியாக தேர்ச்சி விகிதம்!

பாடவாரியாக 100க்கு 100 மதிப்பெண்கள்