தமிழ்நாடு

டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத பெண் குழந்தை உயிரிழப்பு

டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத பெண் குழந்தை உயிரிழப்பு

webteam

நாமக்கல் அருகே டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11 மாத பெண் குழந்தை உயிரிழந்தது.

நாமக்கல், சாலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், சரண்யா தம்பதியின் 11 மாத பெண் குழந்தை தன்ஷிகாஸ்ரீக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. நாமக்கல்லிலுள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. காய்ச்சல் குறையாத நிலையில், கடந்த 20ஆம் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு டெங்கு உறுதி செய்யப்படிருக்கிறது.

நேற்று முன்தினம் மேல்சிகிச்சைக்காக தன்ஷிகாஸ்ரீயை அவரது பெற்றோர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தன்ஷிகாஸ்ரீக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.