எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கில் மனசாட்சிப்படி தீர்ப்பளித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
11 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கில் நேற்று தீர்ப்பு வந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, தான் மனசாட்சிப்படி தீர்ப்பளித்துள்ளதால் ஆண்டவனுக்கு மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். வழக்கின் தன்மையை பொறுத்து முழு மனதுடன் விசாரித்து சட்டத்துக்கு உட்பட்டு தீர்ப்பளிப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். மேலும் வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்துக் கூற அனைவருக்கும் உரிமை உள்ளது என்றும் தலைமை நீதிபதி கூறினார்.
11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கின் தீர்ப்பு விலை கொடுத்து வாங்கப்பட்டதாக டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் கருத்து கூறியிருந்த நிலையில் அவர் மீது தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் சூர்யபிரகாசம் முறையிட்டதை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இந்த நிலையில் தங்கத்தமிழ்ச்செல்வன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தால் கோடை விடுமுறைக்குப்பின் விசாரிப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.