தென் இந்தியாவின் பிரசித்தி பெற்ற இடங்களை சைக்கிள் மூலம் பிரான்ஸ் நாட்டினர் சுற்றி பார்த்து வருகின்றனர்.
தென் இந்தியாவின் பிரசித்தி பெற்ற இடங்களை சுற்றிப் பார்க்கும் விதமாக பிரான்ஸ் நாட்டிலிருந்து 11 பேர் கொண்ட குழுவினர் சுற்றுலா வருகை புரிந்துள்ளனர். இவர்கள் இங்குள்ள இயற்கை அழகு, சூழலியல் அமைப்பு உள்ளிட்டவற்றை இரசிக்கும் விதமாக சைக்கிள் மூலம் ஒவ்வொரு இடமாக சென்று வருகின்றனர்.
இன்று திருச்சியிலிருந்து காரைக்குடி வந்த இந்தக் குழுவினர் காரைக்குடியிலுள்ள செட்டிநாடு முறை குறித்தும் அங்குள்ள கட்டடங்கள் குறித்தும் கேட்டறிந்தனர். பின்னர் அதனை தொடர்ந்து சைக்கிளில் மேலூர் வந்தடைந்து உணவு அருந்திய பின்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு அங்கிருந்து கேரளாவிற்கும் சைக்கிள் மூலம் செல்லவுள்ளதாக இந்தக் குழுவினர் தெரிவிக்கின்றனர். வருடந்தோறும் இதுபோன்ற வெளிநாட்டு குழுவினர் மதுரை, காரைக்குடி,அழகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சைக்கிள் மூலம் ரசிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.