சென்னை மயிலாப்பூரில் ஒரே தெருவில் 11 பேருக்கு கொரானா தொற்று உறுதியான சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்த பெண் ஒருவர் தரமணி் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவருக்கு கொரோனா தொற்று உறுதிச்செய்யப்பட்டு 3 நாட்களுக்கு முன் ஓமாந்தூரரர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அதேபகுதியை சேர்ந்த குழந்தைகள், பெரியவர்கள் என 11 பேருக்கு இன்று கொரானா தொற்று உறுதியானது. இதையடுத்து 11 பேரும் ஓமாந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஓரே நாளில் ஒரே தெருவைச் சேர்ந்த 11 பேருக்கு தொற்று உறுதியான சம்பவம், அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே, அந்த பகுதியில் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில், சென்னையில் மட்டும் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,937இல் இருந்து 2,058 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 103 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 673 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.