திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து 10ம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்.
ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சவரிமுத்து தனது வீட்டில் துப்பாக்கி வைத்திருந்துள்ளார். சவரிமுத்து மனைவி மற்றும் மகளை அழைத்துக்கொண்டு வெளியூர் சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த அவரின் மகன் கெவின் அந்த துப்பாக்கி எடுத்து விளையாடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சவரிமுத்து வீட்டிலிருந்து துப்பாக்கி குண்டு வெடித்த சத்தம் கேட்டு அக்கப்பக்கத்தினர் சென்று பார்த்தபோது கெவின் தலையில் குண்டுபாய்ந்து இறந்துகிடந்தார். துப்பாக்கியை தவறுதலாக பயன்படுத்தியதால் கெவின் உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா எனவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.