தமிழ்நாடு

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

Rasus

தமிழகம் மற்‌‌றும் புது‌ச்சேரியில் இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன.

ஏப்ரல்20ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, 36 ஆயிரத்து 649 தனித்தேர்வர்கள் உட்பட மொத்தம் 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்காக 3 ஆயிரத்து 609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 186 கைதிகள் மற்றும் 5 திருநங்கைகளும் 10ஆம் வகுப்பை எழுதவுள்ளனர்.

இதற்காக புழல், திருச்சி, பாளையங்கோட்டை,கோவை மத்திய சிறைகளில் சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை கண்க‌ணிக்க 6 ஆயிரத்து ‌900 பறக்கும் படைகள் அமைக்கப்‌பட்டுள்ளன.