10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட மாணவர்களின் புகைப்படங்கள், மதிப்பெண்களைக் கொண்டு விளம்பரம் கொடுப்பதை தனியார் பள்ளிகள் தவிர்க்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கையில், மாணவர்களின் நலன் கருதி வெளியிடப்பட்டிருக்கும் அரசாணையின் நோக்கத்தை சிதைக்கும் வகையில் தனியார் பள்ளிகள் நடந்துகொள்ளக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சில மாணவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளை அமைத்தல், விளம்பரப்படுத்துதல், நாளிதழ் மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியிடுதல் போன்றவற்றை பள்ளி நிர்வாகங்கள் தவிர்த்திட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.