தமிழ்நாடு

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் : தமிழக அரசு

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் : தமிழக அரசு

webteam

அக்.1ஆம் தேதி முதல் 10, 11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஒவ்வொரு ஆசிரியர் குழுவும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பள்ளிகளுக்கு வரும். அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம். கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே அவர்கள் செல்லலாம். பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் சந்தேகங்களை கேட்டு தீர்த்துக்கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆன்லைனில் எடுக்கும் பாடங்கள் புரியவில்லை எனக்கூறி மாணவ மாணவிகள் பல்வேறு இடங்களில் தற்கொலை செய்து கொள்வதாக பெற்றோர் மத்தியில் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.