மருத்துவ ரீதியிலான அவசர தேவைக்கு அரசு சார்பில் 108 எண் ஆம்புலன்ஸ் சேவை பயன்பாட்டில் உள்ளது. விபத்து நேரிட்டாலோ, திடீரென மருத்துவ உதவி தேவைப்பட்டாலோ 108க்கு இலவசமாக அழைக்கலாம். அவர்கள் நேரடியாக வந்து மருத்துவ மனைக்கு கொண்டு செல்வார்கள். செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் முதலுதவி செய்யப்படும். இது ஏழை, எளிய மக்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது.
இந்நிலையில், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவையை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பலரும் 108 எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை என சமூக வலைத்தளங்களில் புகார் தெரிவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 108 எண் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், 044-40170100 என்ற எண்ணை தற்காலிகமாக தொடர்புக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு விரைவில் சரிசெய்யப்பட்டு வழக்கம் போல் 108 சேவை இயங்கும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட 108 எண் சேவை சீரானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.