தமிழ்நாடு

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036ஆவது சதய விழா - பந்தல்கால் நடும் விழா

Veeramani

மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆயிரத்து 36ஆவது சதய விழாவை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோவிலில் பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரதன்று, இரண்டு நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக முக்கிய நிகழ்வான ராஜராஜனுக்கு மாலை அணிவிப்பு, பெருவுடையாருக்கு அபிஷேகம் மற்றும் பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு மட்டும் நடைபெற்றது. இந்த ஆண்டும், 13ஆம் தேதி மட்டும் சதய விழா நடைபெறவுள்ளது.