வெற்றிப்படிகள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

கோவையில் +2 மாணவர்களுக்கு வெற்றிப்படிகள் நிகழ்ச்சி: 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

புதிய தலைமுறையின் வெற்றிப்படிகள் நிகழ்ச்சி: மாணவர்களுக்கு பயனுள்ள வழிகாட்டல்

PT digital Desk

+2 பொது தேர்வை எழுத இருக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாக புதிய தலைமுறையின் வெற்றிப்படிகள் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இதில் திரளான மாணாக்கர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். பன்னிரண்டாம் வகுப்பு மாணாக்கர்கள் பொது தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ளளவும், அதிக மதிப்பெண்களை பெறவும் புதிய தலைமுறை ,மற்றும் கோவை PPG நிறுவனம் இணைந்து வெற்றிப்படிகள் நிகழ்ச்சியை நடத்தியது.

இந்நிகழ்ச்சியில் 1000 க்கும் மேற்பட்ட கோவையில் உள்ள பள்ளி மாணாக்கர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சியின் ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் புதிய தலைமுறையின் செயல் ஆசிரியர் திருப்பதி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஒவ்வொரு பாடத்திலும் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள். +2 பொது தேர்வை புத்திசாலித்தனமாக எதிர்கொண்டு அதிக மதிப்பெண்களை பெறுவது குறித்து வழிகாட்டினார். மாணாக்கர்கள் தேர்வை மட்டும் அல்ல எதிர்காலத்தையும் நம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றி பெற அறிவுரைகள் வழங்கப்பட்டது.