பூண்டி, திருவள்ளூர் pt web
தமிழ்நாடு

சென்னை: பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு.. தாழ்வான பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னையின் குடிநீர் ஆதரமான பூண்டி ஏரியில் இருந்து 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

PT WEB

பூண்டி ஏரியின் மொத்த அடியான 35 அடியில் நீர்மட்டம் 34.05 அடியை எட்டியதால் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 3,500 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில், 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

பூண்டி ஏரி திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை

பூண்டி ஏரி திறக்கப்பட்டுள்ளதாக் கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், தாமரைப்பாக்கம், புதுக்குப்பம், மணலி, எண்ணூர் பகுதி மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.