தமிழ்நாடு

முகக் கவசம் அணியாமல் வெளியே நடந்து சென்றால் 100 ரூபாய் அபராதம்: சென்னை மாநகராட்சி ஆணையர்

முகக் கவசம் அணியாமல் வெளியே நடந்து சென்றால் 100 ரூபாய் அபராதம்: சென்னை மாநகராட்சி ஆணையர்

webteam

முகக்கவசம் அணியாமல் வெளியே நடந்து சென்றால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சென்னை உட்பட பலப் பகுதிகளில் கொரோனா தொற்றானது அதிகரித்து வருகிறது. இதனால் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் முகக் கவசம் அணியாமல் வெளியே நடந்து செல்பவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாகனங்களில் முகக் கவசம் அணியாமல் செல்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, 6 மாதத்திற்கான வாகன ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.