கடலூரில் 5 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட எம்.பி.ஏ பட்டதாரி வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள பெரிய கொசப் பள்ளம் கிரமத்தை சேர்ந்தவர் குமரேசன். இவர் மீது, கடந்த 2018 ஆம் ஆண்டு உறவினரின் 5 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து குழந்தையின் மருத்துவ பரிசோதனை, மற்றும் குழந்தை அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் குமரேசன் குற்றவாளி என உறுதியானது. இதை அடுத்து கடலூர் மகிளா நீதிமன்றம் குற்றவாளி குமரேசனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.