தமிழ்நாடு

மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 10 ஆயிரம் பேர் விரைவில் நியமனம்: மா.சுப்ரமணியன்

மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 10 ஆயிரம் பேர் விரைவில் நியமனம்: மா.சுப்ரமணியன்

Veeramani

தமிழகத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையை போக்க 2 ஆயிரம் மருத்துவர்கள், 6 ஆயிரம் செவிலியர்கள் மற்றும் 2 ஆயிரம் தொழில்நுட்ப பணியாளர்கள் பணியமர்த்தப்படவுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், சேலம் இரும்பாலையில் வரும் 25 ஆம் தேதிக்குள் 500 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.