தமிழகத்தின் இருவேறு பகுதிகளில் இன்று நிகழ்ந்த சாலை விபத்துகளில் பத்து பேர் உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வேன் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். நாலாட்டின்புதூர் எனும் பகுதியில் சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்ததால் தறிகெட்டு ஓடிய அந்த வாகனம், வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஆறு வயது சிறுவன் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மாரிக்கண்ணு என்பவர், பழுதான தனது காரை ஓரமாக நிறுத்தி சரி செய்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்து மோதியதில் அந்த கார் அருகிலிருந்த ஏரியில் மூழ்கி, அதிலிருந்த சிறுவன் உள்பட ஐந்து பேர் உயிரிழக்க நேரிட்டது.