தமிழ்நாடு

முதலமைச்சருடன் 10 எம்.எல்.ஏக்கள் சந்திப்பு

முதலமைச்சருடன் 10 எம்.எல்.ஏக்கள் சந்திப்பு

Rasus

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் 10 எம்.எல்.ஏக்கள் இன்று திடீரென்று சந்தித்தனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா தலைமையில் அதிமுக அம்மா அணி எனவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி எனவும் செயல்பட்டுவருகிறது. இரு அணிகளையும் இணைக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் தோப்பு வெங்கடாசலம், பழனியப்பன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 8 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நேற்று முதலமைச்சரை சந்தித்தனர். எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், சந்திரசேகர், தென்னரசு, இன்பதுரை, உமா மகேஷ்வரி உள்ளிட்ட 10 அதிமுக எம்.எல்.ஏக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்தனர்.

இதுபற்றி அவர்கள் கூறும்போது, தொகுதி பிரச்னை குறித்து முதலமைச்சரை சந்தித்து மனு கொடுத்ததாகத் தெரிவித்துள்ளனர்.