தமிழ்நாடு

கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை கண்காணிக்க மாவட்டங்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்

கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை கண்காணிக்க மாவட்டங்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்

Sinekadhara

கொரோனா தடுப்புப் பணிகளை கண்காணிக்க மாவட்டங்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  • சென்னை - எச்.எம். ஜெயராம்,
  • திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் - எம்.சி சாரங்கன்,
  • வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தி.மலை மாவட்டங்களுக்கு வி. வனிதா,
  • விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு எம். பாண்டியன்,
  • சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களுக்கு ஆர். தினகரன்,
  • திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களுக்கு சஞ்சய் குமார்,
  • திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களுக்கு அமரேஷ் புஜாரி,
  • தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு ஜே. லோகநாதன்,
  • மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு சைலேஷ்குமார் யாதவ்,
  • நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு எஸ். முருகன் என 10 ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இவர்கள் அனைத்து இடங்களிலும் எஸ்.ஓ.பி என்று சொல்லக்கூடிய நிலைய வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணிப்பார்கள் என்றும், குறைகள் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகாரிகள் அனைவரும் அந்தந்த மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று சோதனை மேற்கொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு மு.க ஸ்டாலின் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.