செங்கல்பட்டு அருகே ஏடிஎம்மில் பணம் நிரப்ப எடுத்துச் செல்லப்பட்ட 1.08 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டு அருகே திருப்போரூர் கூட்டுசாலையில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செங்கல்பட்டு நகரத்தில் உள்ள ஏ.டி.எம் வங்கியில் பணம் நிரப்ப வந்த வாகனத்தை மறித்து சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வாகனத்தில் கொண்டுவந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பணம் இருந்த இரண்டு வாகனமும் செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு வரப்பட்டு, இரண்டு வாகனத்திலும் இருந்த 1 கோடியே எட்டு லட்சம் பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் செங்கல்பட்டில் ஒரு கோடியே எட்டு லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.