ஷார்ஜாவிலிருந்து கோவைக்கு வந்த விமானத்தில் குடலில் மறைத்து கொண்டுவரப்பட 1.3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஹார்ஜாவிலிருந்து கோவை வந்த விமானத்தில் கடத்தல் தங்கம் கொண்டுவரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் விமானத்தில் வந்தவர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த உஸ்மான், பாலக்காட்டை சேர்ந்த ஷாஜகான் ஆகிய இரு பயணிகளையும் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் இருவரும் மலக்குடலில் மறைத்து தங்கம் எடுத்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தங்கத்தை வெளியே எடுத்து பார்த்ததில், அது ரூ.46.78 லட்சம் மதிப்புள்ள 1,356 கிராம் தங்கம் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்களை விசாரித்தனர். அதில், முகவரி தெரியாத நமருக்காக தாங்கள் தங்கத்தை கடத்தி வந்ததாகவும், இதைக்கொண்டு சென்று கொடுத்தால் கமிஷன் கிடைக்கும் என்றும் தெரிவித்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.