தமிழ்நாடு

“நண்பர் திருமாவளவனே விளக்கமளித்துவிட்டார்; இதை விட்டு விடுங்கள்” :அமைச்சர் ராஜகண்ணப்பன்

“நண்பர் திருமாவளவனே விளக்கமளித்துவிட்டார்; இதை விட்டு விடுங்கள்” :அமைச்சர் ராஜகண்ணப்பன்

Veeramani

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை தான் எந்த வகையிலும் அவமதிக்கவில்லை என போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கமளித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், "திருமாவளவனும், நானும் பல ஆண்டுகால நண்பர்கள். நான் அவரை ஷோபாவில் அமரச்சொன்னேன். ஆனால் அவர் உட்காரவில்லை. அவர்தான் பிளாஸ்டிக் சேரில்  அவருடைய வசதிக்கேற்ப அமர்ந்து பேசினார். உங்களுடன் பேசவேண்டும் என்று நாற்காலியில் அமர்ந்தார். அப்படி உட்காருவது திருமாவின் மெனரிசம். இந்த விவகாரம் குறித்து நண்பர் திருமாவளவளவனே விளக்கம் அளித்திருக்கிறார்.

நாங்கள் இருவரும் பழைய நண்பர்கள். அந்த காலத்தில் பாயில் அமர்ந்து பேசியிருக்கிறோம். இது ஒரு சாதாரணமான சம்பவம். இதை பெரிதுபடுத்த தேவையில்லை. இயல்பாக நிகழ்ந்த ஒருசம்பவத்தை சிலர் தேவையின்றி சிலர் அரசியலாக்கி விட்டனர்.” என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் ராஜகண்ணப்பனை திருமாவளவன் நேரில் சென்று சந்தித்தார். அவருடன் விசிக நிர்வாகிகளும் உடன் சென்றனர். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அமைச்சர் ராஜகண்ணப்பன் ஒரு சொகுசான ஷோபாவில் அமர்ந்து கொண்டும், அவருக்கு எதிரில் திருமாவளவன் பிளாஷ்டிக் நாற்காலியில் கைகட்டியவாரு அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் புகைப்படம் அது. இது தொடர்பான ஒரு விவாதமே சமூக வலைதளங்களில் நடைபெற்றது

அதனையடுத்து, “அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர் அருகில் ஷோபாவில் வந்து அமரும்படி  மூன்று முறை அழைத்தார். ஆனால் நான் தான் முகம் பார்த்து பேச முடியாது மற்றும் நடுவில் ஒரு சிலை இருந்த காரணத்தினால் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தேன். இதை சில குதர்க்கவாதிகள் தவறாக பரப்புகின்றனர்” என்று திருமாவளவன் விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில்தான் திருமாவளவன் அளித்த விளக்கத்தையும் குறித்து இந்த விவகாரத்தை இத்தோடு விட்டுவிடுமாறு அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்றைய பேட்டியில் கேட்டுக் கொண்டார்.