தமிழ்நாடு

'கலாச்சார மைய ஆலோசனைக் குழுவில் தமிழர் ஒருவர்கூட இல்லை’ - சு.வெங்கடேசன் எம்.பி!

'கலாச்சார மைய ஆலோசனைக் குழுவில் தமிழர் ஒருவர்கூட இல்லை’ - சு.வெங்கடேசன் எம்.பி!

sharpana

இந்தியா முழுக்க தொல்லியல் அகழாய்வு பணிகளுக்கான அனுமதி கொடுக்கும் கலாச்சார மையத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர்கூட இல்லை என்று சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

”இந்தியா முழுக்க தொல்லியல் அகழாய்வு பணிகளுக்கான அனுமதி கொடுக்கும் அதிகாரம் படைத்த CABA கமிட்டிக்கான அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தைச்சார்ந்த ஒருவர் கூட இல்லை. எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.