வரும் 2 நாட்களுக்கு வெப்பமும் காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் ஒருசில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகரித்துக் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒருசில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 2 மூதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் கடல் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என்பதால் தென்கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்குச் செல்ல வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.