தமிழ்நாடு

'மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது' : துரைமுருகன் திட்டவட்டம்

'மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது' : துரைமுருகன் திட்டவட்டம்

Veeramani

மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “ யார் போராட்டம் நடத்தினாலும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியிருக்கிறார். மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பையும், காவிரி நடுவர்மன்ற தீர்ப்பையும் மதிக்கமாட்டோம் என்று  ஒரு மாநில முதல்வரே சொல்வது ஏற்புடையது அல்ல.

புதிதாக பதவிக்கு வந்த துடிப்பில் அவர் அப்படி பேசியுள்ளார், விபரம் அறிந்தவுடன் அவர் நல்ல முடிவுக்கு வருவார் என நம்புகிறேன். மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” என தெரிவித்தார்.