பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யும் அதிகாரம் தனக்கு இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் அன்பழகன், தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் சமுதாய சீர்கேடு ஏற்படுவதாகவும், அதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் நாராயணசாமி, பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யும் அதிகாரம் தனக்கு இல்லை என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், ரிமோட் மூலம் வேறு தொலைக்காட்சியை மாற்றி பார்க்க வேண்டியதுதானே என்று கூறினார். இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.